முகவுரை

நீங்கள் வாழ்க்கையில் விரக்தி அடைந்துள்ளீர்களா? “நான் ஏன் வாழ்கிறேன்” என்று உங்களுக்குள் கேள்வி எழுகிறதா? தோல்வி, இழப்பு, பயம், துயரம், வேதனை, கண்ணீர் இவைதான் வாழ்கை என்றால், நாம் எதற்காக வாழ வேண்டும்? வாழ்வை பற்றி நினைக்கும் போது மனதில் தோன்றும் முதல் சிந்தனை இதுவே. நண்பர்களால் மனவேதனை, உணர்ச்சிவயத்தால் கடுந்துயர், தாழ்வு மனப்பான்மை போன்றவைகளால் இவ்வாழ்க்கை வாழ்வது வீண் என்ற எண்ணம் தோன்றலாம். ஆனால் உங்கள் வாழ்கை ஒருவருக்கு மிகவும் அருமையானது என்று உங்களுக்கு தெரியுமா? நீங்கள் அற்புதமாக படைக்கப் பட்டவர் என்பது உங்களுக்கு தெரியுமா? உங்களை நேசிக்கிற, உங்கள் வாழ் நாள் முழுவதையும் நன்மையாக மாற்ற விரும்புகிற ஒருவர் உண்டென்பது உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு நித்திய ஜீவனை தர விரும்புகிற ஒருவர் உண்டென்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உங்களுக்காக இன்னும் அநேக காரியங்கள் வைக்கப் பட்டிருக்கிறது. உங்களுக்காக வைக்கப் பட்டிருக்கும் அந்த பொக்கிஷங்கள் எவைகள் என்று இவ்விணைய தளத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். தாமதமின்றி உங்கள் மனதில் எழுகின்ற கேள்விகளின் விடைகளை அறிந்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வின் அர்த்தத்தைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க

கடவுளிடமிருந்து ஒரு கடிதம்

a letter from god

என் பிள்ளையே, நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணினேன். நீ எதிர்பார்த்திருக்கும் முடிவை உனக்கு கொடுக்கும்படிக்கு நான் உன்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன். அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.

மேலும் படிக்க

ஒருவர் உன்னை நேசிக்கிறார்

someone loves you

வாழ்வின் துயரமான சூழ்நிலைகளில் என்னை நேசிக்க எவருமில்லை என்று தனிமையில் வாடுவதைக் காட்டிலும் கொடியது வேறொன்றும் இல்லை. உங்களுக்கு பிரியமானவர்கள் என்று நீங்கள் எண்ணுகிறவர்கள் கூட உங்களைக் கை விட்டது போலத் தோன்றும். சில நேரம் உண்மையாகவே நேசிக்க யாருமில்லாமல் தனிமையில் வாடுவீர்கள்.

மேலும் படிக்க

வாழ்வின் நோக்கம்

purpose of life

நீங்கள் எப்பொழுதாயினும் “நான் ஏன் இந்த பூமியில் இருக்கிறேன்” என்று வியந்ததுண்டா? எப்பொழுதாயினும் “என் வாழ்வின் நோக்கம் என்ன” என்று உங்களை நீங்களே கேட்டுக் கொண்டது உண்டா? இந்தப் பூமியில் நாம் மிக குறுகிய காலமே வாழப் போகிறோம். என்றாவது ஒரு நாள் நம் வாழ்வு முடியப் போகிறது என்றால், நாம் எதற்காகத் தான் வாழ்கிறோம்? மனித வாழ்வின் நோக்கம் தான் என்ன? இந்த வாழ்விற்கு உண்மையான அர்த்தம் என்று ஏதாகிலும் உண்டா?

மேலும் படிக்க