முடிவெடு

நீங்கள் இப்போது எடுக்க போகும் முடிவு உங்கள் வாழ்வின் மிக முக்கியமான முடிவு . இயேசுவை நீங்கள் உங்கள் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உங்கள் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப் படுவீர்கள். உங்களது பாவத்தின் கிரயத்தை செலுத்துவதற்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார். அவரை இரட்சகராக ஏற்றுக்கொண்டு, பாவங்களில் இருந்து விடுபட நமக்கு முழு சுதந்திரம் தந்திருக்கிறார். நீங்கள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்பினால், பின்வரும் ஜெபத்தினை செய்யலாம். இந்த ஜெபம் உங்களை இரட்சிப்பதில்லை. நீங்கள் இயேசுவின் மீது வைக்கும் விசுவாசமே உங்களை இரட்சிக்கும். இந்த ஜெபம் நீங்கள் தேவன் மீது கொண்டுள்ள விசுவாசத்தை வெளிப் படுத்துவதும், அவர் தரும் மன்னிப்பிற்காக நன்றி செலுத்துவதும் ஆகும். உங்கள் விசுவாசத்தை வெளிப் படுத்தும் விதமாக நீங்கள் இந்த கீழ்க்கண்ட ஜெபத்தினை செய்யலாம்:

“ஆண்டவராகிய இயேசுவே, நான் பாவி என்றும் நித்திய ஆக்கினைக்கு உரியவன் என்பதையும் உணர்கிறேன். நீர் தேவனுடைய குமாரன் என்பதையும், என் பாவத்தின் கிரயத்தை செலுத்துவதற்காக சிலுவையில் மரித்தீர் என்பதையும் விசுவாசிக்கிறேன். என் பாவங்களை மன்னித்து எனக்கு நித்திய ஜீவன் தருவதற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, அனுதினமும் எனக்கு வழிக் காட்டி, சதா காலமும் என்னை நடத்தி செல்லும். ஆமென்.”

இந்த ஜெபம் உங்கள் உள்ளத்தின் விருப்பத்தை வெளிப் படுத்துவதாய் உள்ளதா?

ஆம், நான் ஜெபித்தேன்

இல்லை, சில கேள்விகள்