purpose of life

வாழ்வின் நோக்கம்

நீங்கள் எப்பொழுதாயினும் “நான் ஏன் இந்த பூமியில் இருக்கிறேன்” என்று வியந்ததுண்டா? எப்பொழுதாயினும் “என் வாழ்வின் நோக்கம் என்ன” என்று உங்களை நீங்களே கேட்டுக் கொண்டது உண்டா? இந்தப் பூமியில் நாம் மிக குறுகிய காலமே வாழப் போகிறோம். என்றாவது ஒரு நாள் நம் வாழ்வு முடியப் போகிறது என்றால், நாம் எதற்காகத் தான் வாழ்கிறோம்? மனித வாழ்வின் நோக்கம் தான் என்ன? இந்த வாழ்விற்கு உண்மையான அர்த்தம் என்று ஏதாகிலும் உண்டா? இவைகள் உங்களுடைய கேள்விகளாய் இருக்குமாயின், நீங்கள் சரியான இடத்தில் தான் உள்ளீர்கள். வாழ்வின் நோக்கத்தை அறிவதே ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிக முக்கியமான காரியமாகும். உங்கள் வாழ்வின் நோக்கத்தை அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

தேவன் நம்மை உண்டாக்கி ஆசிர்வதித்தார்

god created and blessed usஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார். தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது. தேவன் இவ்வுலகில் உள்ள அனைத்தையும் உண்டாக்கினார். அவருடைய படைப்பில் மிக சிறந்த படைப்பு மனிதனே, ஏனென்றால் தேவன் மனிதனை தம்முடைய சாயலில் சிருஷ்டித்தார். அவர் மனிதனை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார். தேவனாகிய கர்த்தர் மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனிதன் ஜீவாத்துமாவானான். தேவன் மனிதனை நேசித்தார். தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதித்தார். தேவன் மனிதனுக்கு சுயமாக முடிவெடுக்கும் திறனை தந்தருளினார், ஆனால் மனிதன் அதை தவறாக பயன்படுத்தி தேவனுக்கு கீழ்ப்படியாமற் போனான்.

 

பாவம் நம்மை தேவனிடத்திலிருந்துப் பிரித்தது

sin separated us from godமனிதனின் கீழ்ப்படியாமை நிமித்தம் பாவம் இவ்வுலகில் தோன்றியது. மனிதனின் இருதயத்தின் யோசனைகள் எல்லாம் பொல்லாப்பு நிறைந்ததாய் இருந்தது. ஆகவே பாவம் மனிதனை தேவனிடமிருந்துப் பிரித்தது. பாவம் என்பது தேவனால் விலக்கப்பட்ட செயல் அல்லது சிந்தனை ஆகும். நாம் அனைவரும் வழி விலகி நம்மை நேசிக்கும் தேவனை விட்டு பின் சென்றோம். பாவத்தை விட்டு முற்றிலும் விலகி நன்மை செய்யும் நீதிமான் ஒருவராகிலும் இவ்வுலகில் இல்லை. பூமியிலே பாவம் பெருக மனிதன் தேவனை மறந்து போனான், மனிதனுக்கும் தேவனுக்கும் உள்ள இடைவெளியும் அதிகமாகி கொண்டே இருந்தது. பாவத்தின் சம்பளம் மரணம். நாம் எல்லோரும் பாவம் செய்து நரகத்தில் நித்திய மரண தண்டனை பெறுவதற்கு ஏதுவானோம்.

 

இயேசு கிறிஸ்து நம் பாவங்களை சுமந்துத் தீர்த்தார்

jesus christ paid for our sinsபாவம் நிறைந்த மனித இனத்தின் மீட்பிற்காக பாவ நிவாரண பலி தேவைப்பட்டது, ஆதலால் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் மனிதனாகப் பிறந்தார். இப்படியாக தேவன் தம்முடைய ஒரே குமாரனை தந்தருளி தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார். அவரை நம்புகின்ற அனைவருக்கும் நித்திய வாழ்வு உண்டு. பாவத்தின் நிமித்தம் தேவனுக்கும் மனிதனுக்கும் ஏற்பட்ட இடைவெளியை நீக்க இயேசு கிறிஸ்து மத்தியஸ்தராக தோன்றினார்.தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே. அவர் நமது பாவங்களுக்காக பாவ நிவாரண பலியாக சிலுவையில் பலியாகி மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார்.

 

இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொள்ளுதல்

receiving jesus as our saviourநாம் அனைவரும் நித்திய மரண தண்டனையில் இருந்து தப்புவதே தேவனின் விருப்பமாகும். இயேசுவின் மரணத்தின் மூலமாய் நாம் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து இருந்து விடுதலை பெற்று அவருடைய உயிர்த்தெழுதலின் மூலமாய் நாம் புது வாழ்வு பெற்று இருக்கிறோம். இயேசு கிறிஸ்து மட்டுமே நித்திய மரணத்திலிருந்து மனிதனை விடுவிக்க தேவன் கொடுத்த ஒரே வழியாகும். அவரே பரலோகத்திற்கு செல்ல ஒரே வழி ஆவார். அவர் மூலமாய் அல்லாமல் யாரும் தேவனிடத்திற்கு சேர முடியாது. இயேசுவை உங்கள் வாழ்வில் பெற்று கொள்ள நீங்கள் எதையும் செய்ய வேண்டியது இல்லை. இயேசுவை சொந்த இரட்ச்சகராக ஏற்றுக் கொள்ள, உங்கள் பாவ நிலையை உணர்ந்து, மனம் திரும்பி இயேசுவை விசுவாசித்தால் போதும். இயேசுவை நீங்கள் உங்கள் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உங்கள் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப் படுவீர்கள்.

நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா?

முடிவெடு